Posts

Showing posts from 2025

நெருப்பு அழுக்காகாது - டாலஸ் SOTT நிகழ்வு

Image
இரண்டு மாதங்களுக்கு முன், ஆகஸ்ட் 2025 கம்பராமாயணக் கச்சேரி முடிந்தவுடன் கலைஞர்களுடன் டாலஸ் வாசிப்பு வட்ட நண்பர்களும் ஆஸ்டின் நண்பர்களும் சேர்ந்து இரவுணவுக்காக சென்றோம். கச்சேரி குறித்த எங்கள் மகிழ்ச்சியையும் அதற்கான செயல் கொடுத்த நிறைவையும் கொண்டாடிவிட்டு பிரியும் போது சௌந்தர் சார் மெதுவாக, “அடுத்து ஜெ. வருகிறார் - SOTT புத்தக அறிமுக விழா - டாலஸில் தான் - கெட் ரெடி”  என்றார். நிகழ்ச்சி நிரல் குறித்தும் இடம் குறித்தும் வெவ்வேறு கருத்துகள் கொண்டிருந்த டாலஸ் நண்பர்களிடம் பாலாஜி “ஆஸ்டின் வரும் ஜெ. வை நாம் சென்று அழைத்துவரலாம். என்ன நினைக்கிறீர்கள்? ” என்று கேட்டவுடன் எல்லோரும் ஒத்துக்கொண்டு கைதூக்கி விட்டதோடு மட்டுமல்லாமல், அப்போதே சௌந்தர் சாரை அழைத்து துண்டு போட்டு வைத்துவிட்டோம். முன் பின், இடம் வலமென மாறிய எல்லாவற்றிலும் மாறாமல் இருந்தது இது மட்டும் தான். ஒருவேளை நாங்கள் இதை முடிவெடுத்தது “துடுவ்” என்று அவராலும் உங்களாலும் அழைக்கப்படும் துருவ் முன்னிலையில் என்பதால் தானோ என்று ஒரு எண்ணம். நண்பர்கள் அனைவருக்கும் தொடர்ந்து செயலால் நிரம்பிய நாட்கள். Barnes & Noble புத்தக்கடையின் பணி...

ஈராறு கால்கொண்டெழும் புரவி - வாசிப்பனுபவம்

Image
டாலஸ் நண்பர்களின் அக்டோபர் இரண்டாம் வார சந்திப்பில் ஜெயமோகனின் "ஈராறு கால்கொண்டெழும் புரவி" குறுநாவல் குறித்து விவாதித்தோம். அதற்கான என் வாசிப்பை தொகுத்து எழுதிக்கொண்டதை இங்கே பகிர்கிறேன். இந்த நாவலை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மனநிலைகளில் படித்திருக்கிறேன். அதில் நிறைந்திருக்கும் சித்தர் பாடல்கள் குறித்த அறிமுகமில்லாமையாலும் நாவல் நிகழும் தளம் மற்றும் கதாபாத்திரங்களின் மனவோட்டம் குறித்த சரியான புரிதல் இல்லாமையாலும் நாவல் சற்று அந்நியப்பட்டே நின்றது. ஆனால், வேறு சில எழுத்தாளர்களின் இதுபோன்ற படைப்புகள் கூட்டுவாசிப்பின் மூலம் திறந்து கொள்வதைக் கண்டும், தொடர்ச்சியாக சில வாரங்கள் வாசித்த நவீனத்துவ / யதார்த்த காலகட்ட சிறுகதைகள் நம்மில் சிலரிடம் தோற்றுவித்த ஒரு "போதாமை" உணர்வைக் களையவுமே இந்த குறுநாவலை பரிந்துரைத்தேன்.   இம்முறை வாசித்தது சொல்புதிது வெளியிட்ட புத்தக வடிவில். அதன் முன்னுரையில், சித்தர்ஞானம் மற்றும் பாடல்கள் பகடிகளாக திருப்பப்பட்டுள்ளதையும், அது எல்லோருக்குமானதல்ல எனினும் அனைவருக்கும்  ரசிப்பதற்கான ஒரு வெளி இருக்கிறது என்றும் முன்னுரையில் ஜெயமோகன் குறி...

அலகிலா விளையாட்டுடையார் - டாலஸ் கம்பராமாயணக் கச்சேரி

Image
  கடந்த ஆகஸ்ட் 16, 2025 இல் கம்பரின் சில பாடல்களை சரியான பொருள் & கவிதை நய விளக்கத்துடன் கர்நாடக இசைவடிவில் வழங்கும் "கடலோ மழையோ" நிகழ்வு டாலஸ் நகரில் மிகச் சிறப்பாக நடந்தது. இம்முறை எனக்கு இரட்டை மகிழ்ச்சி - நிகழ்வின் திட்டமிடல், செயல்படுத்துதல் என செயலூக்கமான ஒரு மாதம் மற்றும் வெற்றிகரமாக நடந்த நிகழ்வு ஒன்று.  மற்றது  , ரசிகனாக  அடைந்த  பெருநிறைவு. நிகழ்வை தொகுத்து வழங்க முடியுமா எனக் கேட்ட போது வெகு எளிதாக ஒத்துக்கொண்டு, ஒத்திகையில்  கூட  இயல்பாக பேசிய நண்பர் அன்னபூர்ணா நிகழ்வன்று கையில் குறிப்பை  வைத்துக்கொண்டு  பதட்டமாக படித்துக்கொண்டிருந்தது பள்ளி கால தேர்வு நாட்களை நினைவுபடுத்தியது. ஆனால், மேடையில் எந்த ஒரு பதட்டமுமின்றி முழு அரங்கையும் இயல்பாக நிகழ்வுக்குள் கொண்டுவந்தார். அடுத்த தலைமுறை குழந்தைகளை இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்க முடிவெடுத்ததன்படி எங்கள் வாசிப்பு குழும நண்பர்களின் குழந்தைகள் நிலா கிரி, மீனாக்ஷி மூர்த்தி ஆகியோர் கலைஞர்களை மேடைக்கு அழைப்பதிலும்  காயத்ரி பாலாஜி வரவேற்புரையும் சிறப்பாக செய்தனர்.  நண்பர்  '...

கடவுள் தொடங்கிய இடம் - வாசிப்பனுபவம்

Image
டாலஸ் நண்பர்களின் இவ்வார கூடுகையில் அ.முத்துலிங்கம் ஐயாவின் "கடவுள் தொடங்கிய இடம்" நூலைக் குறித்து விவாதித்தோம். நிகழ்வுக்கு ஆஸ்டினிலிருந்து சௌந்தர், ராதா, கிரி, பாலா & கவிதா ஆகியோர் (உலகப் புகழ் Round Rock Donuts உடன்) வந்திருந்தார்கள்.  அட்லாண்டா நண்பர் சிஜோவின் (யாரிடமும் சொல்லாத) வருகை மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்வின் முடிவில் இணைந்துக்கொண்ட துருவ்-இன் (நண்பர் வெங்கட்டின் சிறுமகன்) வருகையும் அதை இரட்டிப்பாக்கியது. அப்போதுதான் சீரியஸாக சில விமர்சனக் கருத்துகளைக் கூறிமுடித்திருந்த  சௌந்தர் சாரை  ஒற்றைச் சொல்லில் சிறுவனாக்கும் வித்தை தெரிந்தவன். என் வாசிப்பைத் தொகுத்துக்கொள்ளவும் நிகழ்வில் வாசிக்கவும் எழுதியதை இங்கே பகிர்கிறேன்.  இலங்கை இனப்படுகொலைகளும் - அதற்கு சமமாகவே - எதிர்வினை வன்முறையும் சாதாரண குடிமக்களை தன் வேரிலிருந்து பிடுங்கித்துரத்தும் வேதனையான ஒரு பொழுதில்  தன் குடும்பத்தால்  வீட்டை விட்டு  அனுப்பப்படும் நிஷாந் எனும் 19 வயது இளைஞனின் பயணமும் அவன் சந்திக்கும் மனிதர்களும் வாழ்வனுபவங்கள...

ஆஸ்டின் சௌந்தர்

Image
சென்ற ஆண்டு பூன் முகாமில் பங்கேற்றதின் பெறுமதிகளில் ஒன்று இணைமனங்கள்.  இணையம் வழியாகவும் நேரிலும் நண்பர்களுடன் உரையாடுவதும் வாசிப்பை பகிர்ந்துகொள்வதும் புரிதலை பல மடங்கு அதிகரிப்பதை தினமும் அனுபவிக்கிறேன். வாசிப்பென்றால் பேஸ்புக்கில் செய்வது ,  கவிஞர் என்றால்  வைரமுத்து என்ற சுற்றத்துக்கு நடுவே கிடந்து தவித்துக் கொண்டிருந்த எனக்கு உங்கள் வாசகர்களை சந்திக்கும் முதல் வாய்ப்பு  2021  இல் ஆஸ்டின் நகரில் வெண்முரசு ஆவணப்பட திரையிடலில். கோவிட் நோயச்ச காலமாதலால் முகக்கவசம் அணிந்தவர்களிடையே தனியாக பேசிக்கொள்ள இருந்த மனத்தடையால் பெரிதாக எனக்கு யாருடனும் தொடர்பு ஏற்படவில்லை. சில பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தது. எங்களை இணைத்த அடுத்த நிகழ்வு ஜெயமோகனின்   2022  அமெரிக்க வருகை. அங்கு சந்தித்த நண்பர்கள் தொடர்பில் இருந்தாலும் நாங்கள் தன்னளவில்  வாசித்துக்கொண்டிருந்தோமே தவிர இணைந்து பெரிதாக எதுவும் செய்யவில்லை.  2023  இல் ஜெயமோகனுடன் ஒருநாள் முழுதும் சான் ஆன்டோனியோ  நகரைச் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது ,  பலவகையில் என்னளவில் ஒரு மிகப்பெரிய...