Posts

Showing posts from 2013

பீத்தோவனின் ஆவி - வாசிப்பனுபவம்

Image
2013 இல் ஜெயமோகன் தன் தளத்தில் புதிய எழுத்தாளர்கள் சிலரின் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டார். அதில் வேதா என்பவரின் "பீத்தோவனின் ஆவி" என்ற சிறுகதை மிகவும் கவர்ந்தது. அதுகுறித்து ஜெயமோகனுக்கு எழுதி அவர் தளத்திலும் வெளியான கடிதம். வேதாவின் “ பீத்தோவனின் ஆவி”  படித்தேன். சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின் ஆலாபனை, எனக்கு மதுரை சோமுவின் “என்ன கவி பாடினாலும்”. http://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE சம்பிரதாயங்களை நினையாமல் அனிச்சையாக “ஆஹா” என்பதும் வயலினுக்கு “சபாஷ்” சொல்வதும் மிகவும் இயல்பாக, தன்னைக் கரைத்துக் கொண்ட இரு கலைஞர்களின் வித்தை கேட்பவர்களையும் கரைக்கிறது. வண்ணதாசன் அவர்கள் முகநூலில் பகிர்ந்த அருணா சாய்ராமின் “என்ன கவி பாடினாலும்” தேடும் போது கிடைத்த இப்பாடல் மதுரை சோமுவின் குரல் மற்றும் லால்குடி ஜெயராமனின் வயலின் இரண்டும் கொடுக்கும் துக்கம் தாளமாட்டாதது. இரவு பதினோரு மணிக்கு பைக்கில் வீடு திரும்புகையில் கேட்டுவிட்டு கண்ணீர் மறைத்ததால் வண்...
 இந்தியின் தேவை - விவாதம். இந்தியின் தேவை என்னும் தலைப்பில் ஜெயமோகனின் தளத்தில் நடந்த சிறு விவாதத்தில் என் தரப்பாக  எழுதிய கடிதம். அவர் தளத்தில் வெளியிட்டு தர்க்கபூர்வமான விளக்கத்தையும் அவர் அளித்திருந்தார். உணர்வுபூர்வமாக யோசிக்க வேண்டியதையும் தர்க்கபூர்வமாக யோசிக்க வேண்டியதையும் குழப்பிக் கொள்ளும் பழக்கம் குறித்து யோசிக்க வைத்த சம்பவம். அன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். “இந்தியின் தேவை”  மற்றும் “ இந்தி,சம்ஸ்கிருதம்,தமி ழ்” வாசித்தேன். இராஜீவ் கூறுவது சரிதான். அவரது வட மாநிலங்கள் அளவுக்குத் தேவை இல்லையெனினும் பெங்களூருவில் வசிக்கும் எனக்கும் கூட இதே எண்ணம் இருக்கிறது. அறிவார்ந்த விவாதத்துக்காக இல்லையெனினும் தொடர்பு கொள்ளவேனும் இந்தி தேவையாகிறது. அந்தத் தொடர்பு கொள்ளும் தேவை இப்போது பெருகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். பல மாநிலத்தவர் உடன் பணிபுரியும் சூழல் இப்போது கட்டயாமாகப் போய்விட்ட நிலையில், வடக்கு – தெற்கு என்றெல்லாம் பேதமில்லாமல் போகச் செய்யும் விஷயமாக இந்தி இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறேன். அதை மாற்றும் திராணி இங்கு இந்தியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இல்லை. ...

ஜெயமோகனின் "கைதிகள்" மற்றும் "அம்மையப்பம்" சிறுகதைகள் - வாசிப்பனுபவம்

  பொதுவாகவே ஜெயமோகனின் தளத்தில் வரும் புனைவுகளை படிக்க மாட்டேன். காரணம், இணையத்தில் படித்து விட்டால் அவை புத்தகமாக வரும் போது வாங்க ஒத்துக் கொள்ளாத ஒரு நடுத்தர வர்க்க மனநிலை தான். ஒரு உண்மையான படைப்பாளிக்கு  செய்யும் ஒரு குறைந்த பட்ச மரியாதையை மறுப்பதாக ஒரு எண்ணம். (தவறாகக் கூட இருக்கலாம்.) அறம் கதைகள் வெளிவந்த போதும் இப்படித்தான் செய்தேன். அச்சில் வந்த பின்னரே வாங்கிப் படித்தேன். "சோற்றுக் கணக்கு" குறித்து தங்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தேன். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் இம்முறை நடக்கவில்லை. "கைதிகள்" மற்றும் "அம்மையப்பம்" கதைகளை படித்து விட்டு கிறங்கித் திரிகிறேன். அந்தப் பறவையை எனது மனமாகவே நான் உணர்கிறேன். "இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்? -ன்னு கேட்டான்" என்ற வரியைப் படித்துவிட்டு கண்ணீரோடு வெகு நேரம் அமர்ந்திருந்தேன். எனது தற்போதைய பணிச்சூழல் கூட அந்த ஆசாரியை எனக்குப் பிடிக்கச் செய்திருக்கலாம்.  படைப்பில் நீங்கள் சொல்ல வந்ததை முழுமையாக கண்டுகொண்டேனா இல்லையா என எனக்குத் தெரியவில்லை.  ஆரம்ப நிலையில் உள்ள எனது வாசிப்பின் மூலம், எனக்க...