பொன்னியின் செல்வன் - என் மகளின் பார்வையில்
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு என் மகள்களை - படம் பார்க்கும் போது இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது - என்ற முன்குறிப்புடன்தான் அழைத்துச்சென்றேன். ஆச்சரியமாக, அவர்கள் எதற்கும் பொருள் கேட்கவில்லை, மாறாக நகைச்சுவை வரிகளுக்கு சிரித்துக் கொண்டும் காட்சி விரிவிலும் கதையோட்டதிலும் முற்றிலும் கலந்துவிட்டிருந்தனர். ஆம், உண்மையாகவே - இடைவேளை வரும்போதும் எஞ்சியிருந்த சோளப்பொரியே சாட்சி. வீட்டிற்கு வந்து நானும் மனைவியும் எஞ்சிய கதையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அதற்கு விழுந்த தடை படம் அதன் நோக்கத்தை எய்தியதற்கு மற்றுமொரு சான்று. இரண்டாம் பாகம் சற்று மாதங்களுக்குப் பின்னரே வருமென்பதால் இது நினைவில் நிற்க எழுதி வைத்துக்கொள்ள சொன்னேன். வழக்கமாக தயங்குமவள் ஜெயமோகனுக்கு அனுப்புவேன் என்றதும் கடிதமாகவே எழுதிவிட்டாள். படம் குறித்த அவரின் உரைகளில் அவர் சொன்ன சில முக்கியப் புள்ளிகளை அவள் கடிதத்தில் தொட்டிருக்கிறாள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இனி, அவள் கடிதம். On Saturday, October 1st, me and my family went to see ‘Ponniyin...