Posts

Showing posts from 2019

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் - ஒரு விவாதம்

 ஜெயமோகன் அவருடைய ஒரு பேட்டியில் " தமிழகத்தில் பொது வெளியில் ஒரு புத்தக வாசகனுக்கு மதிப்பில்லை, வாசிக்கும் ஒருவனிடம் அவன் குடும்பமும் சரி சுற்று வட்டமும் சரி அதை கைவிட அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள், நாம் ரகசியமாக தான் வாசிக்க வேண்டும் " என்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதை மறுத்து  ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் ஜெயமோகனின் தளத்தில் அவருடைய பதிலோடு வெளியாகியிருந்தது.   வாசிக்க :  அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் இதற்கான பதிலில், ஜெயமோகன் கூறியிருந்த  " இதற்கெல்லாம் அகவயமான மதிப்பீடு மட்டுமே உள்ளது, கணக்கெடுப்பு நடத்த முடியாது. அம்மதிப்பீட்டைச் சொல்பவன் மேல் உங்களுக்கு மதிப்பு உள்ளதா, அவருடைய கணிப்பை ஏற்குமளவுக்கு உங்கள் சொந்த அனுபவம் ஒத்துப்போகிறதா என்பது மட்டுமே கேள்வி. " எனும் கருத்து எனக்கு ஒருவிதத்தில் என்னைக்குறித்து ஒரு நிறைவை அளித்தது. ஏனென்றால், இதுநாள்வரை நான் அவ்வாறு தான் செய்து கொண்டிருந்தேன்.  இந்த விஷயத்தில் என் எண்ணங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன். தமிழகத்தில் வாசிக்கும் ஒருவருக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா? என் த...

வானோக்கி ஒரு கால் - சில எண்ணங்கள்

Image
"வானோக்கி ஒரு கால்" என்ற தலைப்பில் ஜெயமோகன் அவர் அண்மையநிகழ்வுகளை அவர் சென்ற கோவில்களைளை அதிலுள்ள சிற்பங்களை அவற்றை நாம் இப்போது பராமரிக்கும்(?!) முறைகளை குறித்து அவர் பாணியில் எழுதியிருந்தார். அதில் சிலைகளையும் கோவில் மண்டபங்களையும் நாம் எவ்வாறெல்லாம் தவறாக முன்னிறுத்துகிறோம், கவனிக்காமல் விடுகிறோம் என்றும், அர்ச்சகர்கள் ஏன் பேணப்பட வேண்டும் என்றும் அவர்களில் சிலரின் தகுதிக்குறைவு குறித்தும் கூறியிருந்தார்.  அதன் இறுதிவரி - கால் தூக்கி நின்றாடும் பைரவம். ஊர்த்துவதாண்டவன் குறித்த அந்த வரி என் மனதில் பல எண்ணங்களை கிளர்த்தியது. அதனால் அடைந்த மனஎழுச்சியும் அக்கட்டுரையில் அவர் குறிப்பிடும் மற்ற சில கருத்துகளையும், என் நேரடி தனியனுபவங்களின் துணையுடன் யோசித்தேன்.  மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் நெடிதுயர்ந்த ஊர்த்வதாண்டவருக்கு நல்ல வெள்ளை வேட்டி கட்டி விட்டு  ( மேல்நோக்கிய காலுக்கும் தான் )  மானம் காத்த நல்ல உள்ளங்களை கெட்ட வார்த்தையால் திட்டி அம்மாவின் கோவத்துக்கு ஆளாகி   " தெய்வ விக்கிரகத்துக்கு வஸ்திரம் சாத்துறது எல்லாம் ஒரு வேண்டுதல் "  போன்ற நல்லுபதேசங்களை பெற்றேன்...