Posts

Showing posts from May, 2022

மதுரம் - ஜெயமோகன் சந்திப்பு

Image
மார்ச் மாதத்தில் ஒரு நாள் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் அழைத்து ஜெயமோகனின் அமெரிக்க வருகையைக் குறித்து கூறியவுடன் எழுந்த பரவசமும், எதிர்பார்ப்பும் கற்பனைகளும் , ஒத்திகைகளும்  எல்லாம் ஒன்றுமே இல்லை எனுமளவிற்கு இனிமை இனிமை இனிமை என கழிந்தது மே 17, 2022. அவர் தளத்தில் நிரல் அறிவிக்கப்பட்டவுடன் டாலஸ் திட்டத்தைக் கேட்டு சௌந்தர் அவர்களை தொல்லைப்படுத்திக்கொண் டிருந்தேன். என்னைப்போல் வேறு சிலரும் கேட்டுக்கொண்டிருந்தாலு ம் எல்லோருக்கும் பொறுமையாகவும் விரிவாகவும் சலிக்காமல் பதிலளித்து நல்ல ஒரு சந்திப்பை ஒருங்கிணைத்த சௌந்தர் அவர்களுக்கும் ஆனந்த் அவர்களுக்கும் நன்றிகளும் பாரா ட்டுகளும். அலுவல்களை திட்டமிட்டு முடித்து, இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தத்தக்க பணிகள் எதுவும் இல்லை என்பதை வார்த்தைகளாக்கி மேலாளரின் தலையில் மீண்டும் மீண்டும் நிறுவி அவர் பொறுமையிழந்த வேளையில் மூன்றுநாள் விடுப்பு கேட்டவுடன்  அவரே மகிழ்ந்து "தொலைந்து போ சாத்தானே" என்று விரட்டிவிட்டார். எங்கள் வாழ்வில் ஜெயமோகனின் இடமும் இருப்பும் முழுதுணர்ந்த மனைவியும் மகள...