அலகிலா விளையாட்டுடையார் - டாலஸ் கம்பராமாயணக் கச்சேரி
கடந்த ஆகஸ்ட் 16, 2025 இல் கம்பரின் சில பாடல்களை சரியான பொருள் & கவிதை நய விளக்கத்துடன் கர்நாடக இசைவடிவில் வழங்கும் "கடலோ மழையோ" நிகழ்வு டாலஸ் நகரில் மிகச் சிறப்பாக நடந்தது. இம்முறை எனக்கு இரட்டை மகிழ்ச்சி - நிகழ்வின் திட்டமிடல், செயல்படுத்துதல் என செயலூக்கமான ஒரு மாதம் மற்றும் வெற்றிகரமாக நடந்த நிகழ்வு ஒன்று. மற்றது , ரசிகனாக அடைந்த பெருநிறைவு. நிகழ்வை தொகுத்து வழங்க முடியுமா எனக் கேட்ட போது வெகு எளிதாக ஒத்துக்கொண்டு, ஒத்திகையில் கூட இயல்பாக பேசிய நண்பர் அன்னபூர்ணா நிகழ்வன்று கையில் குறிப்பை வைத்துக்கொண்டு பதட்டமாக படித்துக்கொண்டிருந்தது பள்ளி கால தேர்வு நாட்களை நினைவுபடுத்தியது. ஆனால், மேடையில் எந்த ஒரு பதட்டமுமின்றி முழு அரங்கையும் இயல்பாக நிகழ்வுக்குள் கொண்டுவந்தார். அடுத்த தலைமுறை குழந்தைகளை இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்க முடிவெடுத்ததன்படி எங்கள் வாசிப்பு குழும நண்பர்களின் குழந்தைகள் நிலா கிரி, மீனாக்ஷி மூர்த்தி ஆகியோர் கலைஞர்களை மேடைக்கு அழைப்பதிலும் காயத்ரி பாலாஜி வரவேற்புரையும் சிறப்பாக செய்தனர். நண்பர் '...