Posts

Showing posts from 2017

ஆழமற்ற நதி - ஜெயமோகன் சிறுகதை வாசிப்பனுபவம்

Image
ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ள ஆழமற்ற நதி  அண்மையில் வாசித்ததில் பெரும் தாக்கத்தை செலுத்திய சிறுகதை.  என் வாசிப்பை  இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன்.  பல குறியீடுகள் விரவிக் கிடக்கும் இக்கதை எனக்கு ஒரு நல்ல வாசிப்புப் பயிற்சி. பார்வைக்கு ஆழமற்ற நதிதான் - ஆனால் அதுதான் பாவம் களைகிறது. தேவை செய்த பெரும்பாவத்தின் சுமை தரும் பணிவு. ஜஸ்டிஸ் ஆனாலும், ஆடியிலும் என்டேவியரிலும் வந்தாலும் - இங்கே படுத்துத்தான் தலைமுழுக முடியும். கதிரும் அப்படியே - எல்லோரின் பார்வையிலும் - காசிநாதன் குடும்பத்தார், பணியாட்கள், நம்பூதிரி  எல்லோரிடமும் அதே பார்வை.  நேர்கொண்டு பார்க்க விழைவதில்லை அவனை. ஆனால் அவன்மீதுதான் அவர்களின் பாவ மூட்டைகளை சுமத்துகிறார்கள் -  அவனுக்கு அது புரியாது என்ற நினைப்பில்.  கதிர், தன் விசும்பலின் மூலம் ஒரு சிறு ஒளியை வீசுகிறான். இருட்டிலேயே உழலும் அனைவரும் - சுந்தரேசன் உட்பட - அதை அஞ்சி ஓடுகின்றனர்.  கதிர் முன்னரே புரிந்துதான் செய்தானா?  தன்னைப் போல் இன்னொரு ஜடம் வேண்டாமென்று.  இல்லை  சொற்கள் தொடமுடியாத அம்மனம் -  தொல் குறியீ...

அபிப்பிராய சிந்தாமணி

Image
அண்மையில் பெங்களூருவில் டி வி இல்லாத எங்கள் வீட்டிற்கு வந்திருந்த என் அம்மாவுக்கு நாஞ்சில் அவர்களின் கும்பமுனி கதைத் தொகுப்பைப் படிக்கக் கொடுத்தேன். உடல்நிலை மற்றும் சில கருத்து வேறுபாடுகளாலும் வேறு முகமாக மாறியிருந்தவள், என் இளவயதில் நான் கண்ட –  எத்தனையோ குடும்பக்குழப்பங்களுக்கு இடையிலும் மனம் விட்டு சிரிக்கும் - என் தாயை மீண்டும் பெற்றுக்கொண்டேன். “இந்த மாதிரி வேற ஏதாவது புத்தகம் இருந்தா குடுடா” என்றவளிடம், ஜெயமோகனின்  "ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு"  கொடுத்தேன். அதுவும் அவளுக்குப் பிடித்திருந்தது. அடுத்ததாகக் கொடுக்க “தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்”  மற்றும் ஜெயமோகனின் வேறு சில நகைச்சுவைப் பதிவுகளை அச்செடுத்து எடுத்து வைத்திருக்கிறேன். ஜெ. அவர் இணையப்பக்கத்திலுள்ள நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்ன? துணுக்குத் தோரணங்களும் வார்த்தை விளையாட்டுகளும் நகைச்சுவை என்ற பெயரில் சாவடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இது ஒரு மாற்றாகவும் இருக்கும். என்னைப்போல மேலும் பலருக்கு அம்மாவும் திரும்பக் கிடைப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. அதை அவரிடமே கடி...