ஆழமற்ற நதி - ஜெயமோகன் சிறுகதை வாசிப்பனுபவம்

ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ள ஆழமற்ற நதி அண்மையில் வாசித்ததில் பெரும் தாக்கத்தை செலுத்திய சிறுகதை. 



என் வாசிப்பை இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன். 

பல குறியீடுகள் விரவிக் கிடக்கும் இக்கதை எனக்கு ஒரு நல்ல வாசிப்புப் பயிற்சி.

பார்வைக்கு ஆழமற்ற நதிதான் - ஆனால் அதுதான் பாவம் களைகிறது. தேவை செய்த பெரும்பாவத்தின் சுமை தரும் பணிவு. ஜஸ்டிஸ் ஆனாலும், ஆடியிலும் என்டேவியரிலும் வந்தாலும் - இங்கே படுத்துத்தான் தலைமுழுக முடியும்.

கதிரும் அப்படியே - எல்லோரின் பார்வையிலும் - காசிநாதன் குடும்பத்தார், பணியாட்கள், நம்பூதிரி  எல்லோரிடமும் அதே பார்வை. நேர்கொண்டு பார்க்க விழைவதில்லை அவனை. ஆனால் அவன்மீதுதான் அவர்களின் பாவ மூட்டைகளை சுமத்துகிறார்கள் -  அவனுக்கு அது புரியாது என்ற நினைப்பில். 

கதிர், தன் விசும்பலின் மூலம் ஒரு சிறு ஒளியை வீசுகிறான். இருட்டிலேயே உழலும் அனைவரும் - சுந்தரேசன் உட்பட - அதை அஞ்சி ஓடுகின்றனர். 

கதிர் முன்னரே புரிந்துதான் செய்தானா?  தன்னைப் போல் இன்னொரு ஜடம் வேண்டாமென்று.  இல்லை  சொற்கள் தொடமுடியாத அம்மனம் -  தொல் குறியீடுகளும் முத்திரைகளுமான சடங்கினால் திறக்கிறதா?

இக்கேள்வியின் விடையே அவ்விசும்பல் யாருக்காக என்பதை தீர்மானிக்கிறது.

ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்ட இந்தக் குறிப்பு அவர் தளத்தில் வெளிவந்துள்ளது. 


பணிக்காக அமெரிக்காவின் டாலஸ் நகருக்கு குடிமாறி வந்து ஒருவிதமாக வீட்டையும் இன்ன பிற விஷயங்களையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டு வாசிப்புக்குத் திரும்ப சில காலம் ஆகிவிட்டது.  அமெரிக்காவில் இருந்து அனுப்பியதில் அவர்தளத்தில் வந்த முதல் கடிதம். 

Comments

Popular posts from this blog

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்

சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்