Posts

Showing posts from January, 2022

எழுத்துரு -அனுபவத்தில் இருந்து…

Image
ஜெயமோகனின் " எழுத்துரு " என்ற கட்டுரை மிகவும் புகழ்பெற்றது. அதாவது, பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. அதனால், அவர்கள் தமிழில் படிப்பதில்லை. ஆனால், அவர்களால் பேசவும் தமிழ் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் முடியும். எனவே, தமிழை ஆங்கில லிபியில் எழுதினால் என்ன? என்பதை தனக்கேயுரிய தர்க்கபூர்வமான முறையில்  2013இல் எழுதியிருந்தார்.  ஏற்றும் மறுத்தும் பல கருத்துகள் வெளியாகின.   அந்த எண்ணத்தை அப்பொழுது  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இப்போது எண்ணிப்பார்க்கையில் அது ஒரு உணர்வு ரீதியான மேட்டிமை தான் காரணம் - என் மொழி, என்னால் படிக்க எழுத முடியும் , என் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியும் என்றே எண்ணினேன். பெங்களூருவில் பணியாற்றியபோது என் மனைவி கற்பிக்கவும் செய்தாள். சில ஆண்டுகளில் அமேரிக்கா  வந்த பிறகும்  கற்பித்தல் தொடர்ந்தது. ஆனால் கற்றலின் ஆர்வம் குறைவதை கண்கூடாகக் கண்டேன். மெல்ல மெல்ல மகள்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியாக ஆங்கிலம் ஆகியது. இழுத்து வைத்து கற்பித்தலும் பெரியளவில் உதவவில்லை. இவ்வாறாக சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் சி...