Posts

Showing posts from October, 2017

ஆழமற்ற நதி - ஜெயமோகன் சிறுகதை வாசிப்பனுபவம்

Image
ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ள ஆழமற்ற நதி  அண்மையில் வாசித்ததில் பெரும் தாக்கத்தை செலுத்திய சிறுகதை.  என் வாசிப்பை  இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன்.  பல குறியீடுகள் விரவிக் கிடக்கும் இக்கதை எனக்கு ஒரு நல்ல வாசிப்புப் பயிற்சி. பார்வைக்கு ஆழமற்ற நதிதான் - ஆனால் அதுதான் பாவம் களைகிறது. தேவை செய்த பெரும்பாவத்தின் சுமை தரும் பணிவு. ஜஸ்டிஸ் ஆனாலும், ஆடியிலும் என்டேவியரிலும் வந்தாலும் - இங்கே படுத்துத்தான் தலைமுழுக முடியும். கதிரும் அப்படியே - எல்லோரின் பார்வையிலும் - காசிநாதன் குடும்பத்தார், பணியாட்கள், நம்பூதிரி  எல்லோரிடமும் அதே பார்வை.  நேர்கொண்டு பார்க்க விழைவதில்லை அவனை. ஆனால் அவன்மீதுதான் அவர்களின் பாவ மூட்டைகளை சுமத்துகிறார்கள் -  அவனுக்கு அது புரியாது என்ற நினைப்பில்.  கதிர், தன் விசும்பலின் மூலம் ஒரு சிறு ஒளியை வீசுகிறான். இருட்டிலேயே உழலும் அனைவரும் - சுந்தரேசன் உட்பட - அதை அஞ்சி ஓடுகின்றனர்.  கதிர் முன்னரே புரிந்துதான் செய்தானா?  தன்னைப் போல் இன்னொரு ஜடம் வேண்டாமென்று.  இல்லை  சொற்கள் தொடமுடியாத அம்மனம் -  தொல் குறியீ...