Posts

Showing posts from 2016

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

Image
 2016ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  வாழ்வின் சிறிய விஷயங்களில்கூட மகிழ்வடையும் மனதும் அதை பிறர்க்கு சுவைபட கடத்தும் கலையும் வண்ணதாசனுக்கே வாய்த்த ஒரு அதிசயம். எப்போதும் அவர் நினைவு வரும்போதும் மனதில் தோன்றும் வரி "கனியான பின்பும் நுனியில் பூ". தினமும் காணக்கிடைக்கும், அண்டை வீட்டு வாசலில் பழுக்கும் அதே மாதுளை தான். ஆனால் அதையே இவ்வளவு சுவையாக கூற அவரால்தான் ஆகிறது.  கடையில் வாங்கும் போதும் நல்ல பழங்களை அவருக்கு தேர்ந்து கொடுத்தவர் தன் பெரிய விழிகளுடைய மகளுடன் நிற்கிறாரா என்று அவ்வவ்போது தேடுவேன். விகடனில் வெளியான இந்த ஒரு சிறுகதையே அவருடனான என் அணுக்கதிற்கு போதுமானதாக இருக்கிறது. 2014 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அக்கதை பிரசுரமான தொகுப்பில் அது இடம்பெற்றிருந்த பக்கத்தில் கையெழுத்து கேட்டேன். காரணம் கேட்டால் என் மகளைப் பற்றி சொல்ல எண்ணியிருந்தேன். கண்களும் சேர்ந்து சிரிக்கும் ஒரு புன்னகையுடன் "உங்களுக்கும் மகள் இருக்காளா தம்பி?" என்றார். வேறென்ன சொல்வது, "ஆமா சார், அவளும் வளர்ந்தபின் தினகரி மாதிரி ...

மீனாக்ஷி

Image
இந்திரநீலம் செம்பதிப்பு அறிவிப்பு வந்தவுடன் சென்று முன்பதிவு செய்துவிட்டு அதில் மகள் மீனக்ஷியின் ஜெயமோகனின் பெயரில் கையெழுத்தும் கேட்டிருந்தேன். சென்றமுறை, வெண்முகில் நகரத்தில் என் பெயரை அவர் கையெழுத்தில் பார்த்திருந்த பரவசம் மனதில் எழ, கையெழுத்திடும் அவருக்கும் ஒரு சிறு பொழுதேனும் அவளைபற்றி  எண்ண வேண்டும் என்றெண்ணி  ஒரு சிறு குறிப்பும் இணைத்திருந்தேன். அவரும் அதை வாசித்து கையெழுத்தோடு அவளை வாழ்த்தி ஒரு சிறு குறிப்பும் அனுப்பியிருந்தார். -------------------- மீனாட்சி என்னும் சொல் பற்றி ஒருமுறை காஞ்சி சந்திரசேகரர் சொன்னார். அது அபூர்வமான கலவை. தமிழும் சம்ஸ்கிருதமும். இரு பெரும் பண்பாட்டுவெளிகளின் கலவை. இந்து மதத்துக்கே ஒரு குறியீடு போல என்று மீன்விழி என்பதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். மீன் வடிவம்தான் நமக்குத் தோன்றுவது. ஆனால் மீன் இமைப்பதே இல்லை. அதைப்போல அன்னை தன் மைந்தரை இமைக்காது  புரக்கிறாள் என்பதே அச்சொல்லின் பொருள் என்று மீனாட்சிக்கு என் வாழ்த்துக்கள் -------------------- மேன்மக்கள் மேன்மக்களே !!! இன்று காலை அவளிடம் புத்தகத்தைக் கொடுத்தோம். "இன்னொரு பெரிய புக்கா? ஜெய...