Posts

Showing posts from 2026

அசோகமித்திரனின் அட்சக்கோடு - டி எஸ் எலியட் நிகழ்வு

Image
அமெரிக்க விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் மாதாந்திர கூடுகையான டி எஸ் எலியட் நிகழ்வில், இந்த பிப்ரவரி  மாதம் அசோகமித்திரனின் "பதினெட்டாவது அட்சக்கோடு" நாவல் குறித்து உரையாற்றும் நல்வாய்ப்பு கிடைத்தது.  நுண்ணுணர்வு கொண்ட வாசிக்கும் நண்பர்கள், அவர்களின் கூரிய அவதானிப்புகள், கேள்வி பதில்கள், நிகழ்வுக்குப் பின் தொலைபேசியில் நண்பர்களின் நற்சொற்கள் என இனிமையான & நிறைவளிக்கும் அனுபவத்தை, இவையெல்லாவற்றையும் சாத்தியமாக்கிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  காணொலி:  https://www.youtube. com/watch?v=Do9VXldE9zQ   என் உரையின் எழுத்து வடிவை இங்கே பகிர்கிறேன்.  நண்பர்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு வரையிலான என் பள்ளிநாட்கள் கண்டிப்புக்கும் மேற்பார்வைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கிறித்தவ பள்ளிகளில் கழிந்தது. அங்கிருந்து மேல்நிலை ஆண்டுகளுக்கு சேர்ந்தது ஒரு அரசுப்பள்ளி. வறண்ட மாவட்டமான புதுக்கோட்டையில் - ஊருக்கு முழுதும் வெளியே - பணப்பயிராக, யூகலிபிடஸ் மரங்கள் நடப்பட்ட காட்டிற்கு நடுவே - கருங்கல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம். கண்டிப்ப...

"நக்குபு புக்கும்" டாலஸ் பூனைகள்...

Image
கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பூன் முகாமிலிருந்து திரும்பியபின் நண்பர்கள் இணைந்து டாலஸில் இருவாரத்துக்கொருமுறை என சந்தித்து எங்கள் இலக்கிய வாசிப்பை பகிர்ந்துகொள்கிறோம். அதன் முதலாம் ஆண்டு நிறைவை கிட்டத்தட்ட ஒரு விழாவாகவே கொண்டாடினோம். நண்பர்கள் பிரதீப்பும் அன்னபூர்ணாவும் இதுகுறித்து ஜெயமோகனுக்கு எழுதியிருந்தார்கள்.  வெவ்வேறு விதமான வாசிப்பு முறையும் ரசனையும் கொண்ட நண்பர்களுடன் ஒரு படைப்பு குறித்து விவாதிப்பது என்பது ஒரு பிரதியை முழுமையாக அணுகியறிய பெரியளவில் உதவுகிறது. கொண்டும் கொடுத்தும் என ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் பெருமலர்ச்சியுடன் தான் திரும்புகிறோம்.  பெரும்பாலும் ஜெயமோகனை மட்டுமே படித்துக்கொண்டிருந்த எனக்கு வேறு சில முன்னோடிகளை வாசிக்கும் வாய்ப்பு இங்குதான் கிடைத்தது. புதுமைப்பித்தன் எல்லாவகைமையிலும் ஒரு முன்னோடி என்று ஜெ சொல்வது தெளிவாகப் புரிந்தது. அவரைத் தொடர்ச்சியாக வாசித்த நாட்களில் அவர் கதை போல் இருக்கும் மற்றொரு நவீன ஆசிரியர் அல்லது ஆக்கம் என்ன என்று யோசிப்பது எங்களுக்குள் சுவாரசியமான போட்டி. வெளியிடங்களில் எங்காவது காத்திருக்கும் போது கிடைக்கும் நேர...