Stories of the True - இர்விங் நூலகத்தில்
2022 செப்டெம்பரில் ஊரிலிருந்து வரும்போது வாங்கிவந்த Stories of the True புத்தகங்களில் ஒன்றை டாலஸ் நூலகத்தில் சேர்த்துவிட திட்டமிட்டேன். இங்கு நூலகத்துக்கு யார் வேண்டுமானாலும் நூல்களை கொடையளிக்கலாம் என்பதால் எளிதாக முடியும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், கொஞ்சம் சிக்கலாகவே இருந்தது. கொடையளிக்கப்படும் நூல் நேரடியாக நூலடுக்குக்கு செல்லாது. அது விற்பனைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் நூலகத்துக்கு செல்லும் என்பதே வழிமுறையாம். எனது நோக்கம் பலருக்கும் இந்நூல் வாசிக்கக் கிடைக்கவேண்டும் என்பதாக இருந்ததால், நூலக ஊழியர்களிடமும் தலைமை நூலகரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தேன். அவர்கள் கூறிய அதிகபட்ச வாய்ப்பு, அவர்கள் இணையப்பக்கத்தில் நமக்கு வேண்டிய நூலை வாங்குமாறு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணிக்கை மற்றும் புத்தக இருப்பு (அமெரிக்கப் பதிப்பு) போன்ற சில காரணிகள் இவ்வழியையும் அடைத்தது. மேலும் சிலநாள் முயற்சியில், ஒரேயொரு வழி இருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் கூறியது ராஜபாட்டை. ஆம், புத்தகத்தை அவர்களுக்கு அனுப்பவேண்டியது - அவர்களின் ஒரு குழு வாசித்து முடிவெடுக்கும். அவர்...