அபிப்பிராய சிந்தாமணி
அண்மையில் பெங்களூருவில் டி வி இல்லாத எங்கள் வீட்டிற்கு வந்திருந்த என் அம்மாவுக்கு நாஞ்சில் அவர்களின் கும்பமுனி கதைத் தொகுப்பைப் படிக்கக் கொடுத்தேன். உடல்நிலை மற்றும் சில கருத்து வேறுபாடுகளாலும் வேறு முகமாக மாறியிருந்தவள், என் இளவயதில் நான் கண்ட – எத்தனையோ குடும்பக்குழப்பங்களுக்கு இடையிலும் மனம் விட்டு சிரிக்கும் - என் தாயை மீண்டும் பெற்றுக்கொண்டேன். “இந்த மாதிரி வேற ஏதாவது புத்தகம் இருந்தா குடுடா” என்றவளிடம், ஜெயமோகனின் "ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு" கொடுத்தேன். அதுவும் அவளுக்குப் பிடித்திருந்தது. அடுத்ததாகக் கொடுக்க “தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்” மற்றும் ஜெயமோகனின் வேறு சில நகைச்சுவைப் பதிவுகளை அச்செடுத்து எடுத்து வைத்திருக்கிறேன். ஜெ. அவர் இணையப்பக்கத்திலுள்ள நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்ன? துணுக்குத் தோரணங்களும் வார்த்தை விளையாட்டுகளும் நகைச்சுவை என்ற பெயரில் சாவடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இது ஒரு மாற்றாகவும் இருக்கும். என்னைப்போல மேலும் பலருக்கு அம்மாவும் திரும்பக் கிடைப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. அதை அவரிடமே கடி...