Posts

Showing posts from 2018

இந்திய உளநிலை - கடிதம்

எழுத்தாளர் வி எஸ் நைபால் மறைவு குறித்து ஜெயமோகன் ஒரு அஞ்சலிக் குறிப்பை அவர் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதுகுறித்து வந்த ஒரு எதிர்வினைக்கு பதிலளிக்கும் விதமாக இன்னொரு பதிவில் இவ்வாறு கூறியிருந்தார். " ஆனால் நான் அமெரிக்கா, ஐரோப்பாவில் நெடுநாட்கள் பயணம்செய்யும்தோறும் எனக்கு நைபால் அளித்த பழைய ஒவ்வாமை குறைந்துவருகிறது. இந்தியாவின் பொது உளவியலில் உள்ள சிறுமையும் ஒழுங்கின்மையும் மேலும் மேலும் உறுத்துகிறது. தனிநபர்களாக self esteem  எனும் உணர்வு அற்றவர்கள் நாம். ஒரு போலீஸ் நம்மை அதட்டினால் கூசுவதில்லை. அவர் அதட்டிவிடுவார் என அஞ்சி சட்டத்தை மதிப்பதுமில்லை. முடிந்தவரை குறுக்குப்பாதையில் நுழைகிறோம். முட்டி மோதுகிறோம். களவாக ஒன்றைச் செய்ய தயங்குவதே இல்லை " நான் அமெரிக்க வந்து ஓராண்டு முடிந்திருந்த வேளையில் என் சொந்த அனுபவங்களைக் கொண்டு இக்கருத்தை யோசித்துப்பார்த்தேன். உண்மை தான். இந்தியாவில் என்று மட்டுமில்லை – எங்கு சென்றாலும் நம்மவர்களின் இயல்பே இதுதான்.   இவர்களையே கடந்த ஒன்றரையாண்டு அமெரிக்க வாழ்க்கையில் சந்தித்து வருகிறேன்.   இந்த சிறுமையும் ஒழுங்கின்மையும்  சுயமரியாதையி...

காந்தி & இளையராஜா

Image
  காந்தியின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்த இந்த அற்புதம் இன்று காணக் கிடைத்தது  https://www.youtube.com/watch?v=Z86LscyJhNY ஜெயமோகன் தளத்திலுள்ள காந்தி பற்றிய கட்டுரைகளாலும் அவரின்  உரைகளாலும் நானடைந்த மக்களுக்கும் காந்திக்குமான உறவைக் குறித்த சித்திரத்தின் ஒரு பகுதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. துவக்கத்தில், தன் வீட்டின்முன் நடந்து வரும் காந்தியைக் கண்ட முதிய பெண்மணி கடவுளைக் கண்டவர்போல் அதிர்ந்து வணங்குகிறார். தெருவில் நிற்கும் முதியவரோ தெய்வ சந்நிதியில்போல் பணிந்து நிற்கிறார். வீட்டினுள்ளிருந்து ஓடிவந்து கைகூப்பும் இளம்தாயின் விழிகளும் நடந்தலையும் அப்பாதங்களையே சேர்கிறது – தாய்மை மட்டுமே கொள்ளக்கூடிய துயரத்துடன். தன்னால் இயன்ற ஒற்றை வளையை அளிக்கும்போதும் அவள் விழிகளில் கரிசனம் ததும்பும் அத்துயரே. துயிலெழுந்து காலைச்சூரியனையே தன் கோலியின் மூலமே காணுகிறான் அச்சிறுவன்; தன் பெருஞ்செல்வமாக அதையே சேர்க்கிறான். இறுதியில் அதையே அளிக்கிறான். காந்தியின் வெற்றி – துவக்கத்தில் தனியாளாகவும் பின் நால்வருடனும் தோன்றும் அவரின் பின் திரளும் மக்கள் கூட்டம், தன்னிடமுள்...