Posts

Showing posts from 2021

வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021

Image
 2021ம் ஆண்டின் வெண்முரசு நாள் இணைய வழி உரையாடல் ஜூலை 23ம் தேதி ஒருக்கப்பட்டிருந்தது. சென்றாண்டின் அதே பரவசத்தோடு இப்போதும் இணைந்து  கொண்டேன். திறந்தவெளியில் நிலவொளியில் வெண்ணிற ஆடை என இயற்கையுடனும் / மரபுடனும்,  சுற்றிலும் இரண்டு மடிக்கணினி, ஹெட் செட் என நவீன கால கருவிகளுடனும் அவர் உரையாற்றியது கிட்டத்தட்ட அவர் குறித்த ஒரு படிமம் ஆகவே தோன்றியது. வியாசன், கம்பன் என்னும் மரபின் தொடர்ச்சி, அவர்தம் காவியங்களை நவீன காலத்தில் மருவுருவாக்கும் பேராசான்.  வெண்முரசு & குரு பூர்ணிமை நாளில் ஆசிரியரைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி.  கிருஷ்ண / பாரதக் கதைகளை மகள்களுக்குக் கூறும் போது, வெண்முரசின் கூறுமுறை அவர்களுக்கு மேலும் உவப்பாயிருப்பதைக் கவனிக்கிறேன். பாட்டி சொன்ன ஒரு அரக்கி என்பதைவிட குழந்தையை இழந்த பிச்சியாகவே பூதகி அவர்கள் நினைவில் வாழ்கிறாள்.   யுவால் நோவா ஹராரியின் "சேப்பியன்ஸ்"  புத்தகத்தை குழந்தைகளுக்கான  ஒரு கிராபிக் நாவலாக அவரும் சிலரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். வாசிப்பு சுவாரசியமும் தகவல்களும் எளிமையாகவும்  சிறப்பாகவும் உள்ளது. இதைப்...

வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்

Image
மகள் அவள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய ஒரு போட்டியில் ஒரு குறும்படம் செய்து அனுப்ப அப்படம் மெல்ல மெல்ல பள்ளி, மாவட்டம் என முதலிடம் பெற்று முன்னேறி மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றது. அதற்காக ஒரு பரிசளிப்பு விழாவிற்காக ஆஸ்டினுக்கு மிக அருகே செல்ல வேண்டியிருந்தது. கோவிட்  காலக் கட்டுப்பாடுகள் குறைந்து (நன்றி தடுப்பூசி) இயல்பு வாழ்க்கை எட்டிப்பார்க்கத் தொடங்கியதால்  சற்றே நம்பிக்கைக் கொண்டு   ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்குப்பின் குடும்பத்துடன் பயணித்தபோதுதான் வெண்முரசு ராலே  திரையிடலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தயாரிப்பாளர் டெக்சாஸ்காரர் தான், கண்டிப்பாக இங்கே திரையிடுவார், கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று துண்டு போட்டு வைத்திருந்தேன். மறுநாளே நம் தளத்தில் வெளியான ஆஸ்டின் அறிவிப்பைக் காட்டி அனுமதி வாங்கிவிட்டேன். மகள்களின் பள்ளியின் சில நிபந்தனைகளால் நான் மட்டும் மே 22, 2021 நிகழ்வுக்கு கிளம்பினேன்.  இசையில் தொலைந்து கொலைக்குத் தலை கொடுத்த முன்னனுபவங்களினால் தனியான பயணங்களில் இளையராஜாவுக்குக் கண்டிப்பானத் தடை. மாற்றாக  உங்கள் குறள் உரையுடன...