Posts

Showing posts from 2023

அன்னை மகளாக... குமரித்துறைவி குறித்து...

Image
சில ஆண்டுகளுக்குமுன் ஒரு பேட்டியில் இளையராஜாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு அமிதாப் பச்சன் இவ்வாறு கூறினார் - "வெகுசில இசையமைப்பாளர்களின் இசைதான் நம்மில் தொடர்ந்து வளரும் - அப்படிப்பட்ட இசையமைக்கும் ஒரு மேதை இளையராஜா".   அன்று அது எனக்கு முழுவதுமாகப் புரியவில்லை. பின்னர் வாசிப்பு அளித்த திறப்பில் அவர் கூறியதென நான் புரிந்து கொண்டது -  ஒரு செவ்வியல் படைப்பு அதை அணுகும் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு உச்சதருணத்தை அல்லது உணர்வெழுச்சியை அளித்துக்கொண்டே யிருக்கிறது. அதன்மூலம் நம்மில் அது தொடர்ந்து  வளர்ந்து கொண்டேயிருக்கிறது.   சமீபத்திய சான்று குமரித்துறைவி. இரண்டு ஆண்டுகளுக்குமுன் வெளியான  அன்றிரவே படித்தபோது உதயனுக்கு அம்மை "செல்லக்குட்டி" மகளாகத் தோன்றும் இடத்தை கடந்து செல்ல வெகு நேரமாகியது... இத்தகு உணர்வுரீதியான பற்பல  தருணங்களும், இக்கட்டான முடிச்சை எளிதாக அவிழ்க்கும் சிறமடம் திருமேனியின்  மேதைமை போன்ற அறிவார்ந்த தருணங்களும் இந்நாவலை வளர்த்துக் கொண்டேயிருக்கிறது. அண்மையில் என் மகள்களுக்கு இதை கதையாக ...

Stories of the True - இர்விங் நூலகத்தில்

Image
2022 செப்டெம்பரில் ஊரிலிருந்து வரும்போது வாங்கிவந்த Stories  of  the True புத்தகங்களில் ஒன்றை டாலஸ் நூலகத்தில் சேர்த்துவிட திட்டமிட்டேன். இங்கு நூலகத்துக்கு யார் வேண்டுமானாலும் நூல்களை கொடையளிக்கலாம் என்பதால் எளிதாக முடியும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், கொஞ்சம் சிக்கலாகவே இருந்தது. கொடையளிக்கப்படும் நூல் நேரடியாக நூலடுக்குக்கு செல்லாது. அது விற்பனைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் நூலகத்துக்கு செல்லும் என்பதே வழிமுறையாம். எனது நோக்கம் பலருக்கும் இந்நூல் வாசிக்கக் கிடைக்கவேண்டும் என்பதாக இருந்ததால், நூலக ஊழியர்களிடமும் தலைமை நூலகரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தேன். அவர்கள் கூறிய அதிகபட்ச வாய்ப்பு, அவர்கள் இணையப்பக்கத்தில் நமக்கு வேண்டிய நூலை வாங்குமாறு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணிக்கை மற்றும் புத்தக இருப்பு (அமெரிக்கப் பதிப்பு) போன்ற சில காரணிகள் இவ்வழியையும் அடைத்தது. மேலும் சிலநாள் முயற்சியில், ஒரேயொரு வழி இருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் கூறியது ராஜபாட்டை. ஆம், புத்தகத்தை அவர்களுக்கு அனுப்பவேண்டியது - அவர்களின் ஒரு குழு வாசித்து முடிவெடுக்கும். அவர்...