வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்
மகள் அவள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய ஒரு போட்டியில் ஒரு குறும்படம் செய்து அனுப்ப அப்படம் மெல்ல மெல்ல பள்ளி, மாவட்டம் என முதலிடம் பெற்று முன்னேறி மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றது. அதற்காக ஒரு பரிசளிப்பு விழாவிற்காக ஆஸ்டினுக்கு மிக அருகே செல்ல வேண்டியிருந்தது. கோவிட் காலக் கட்டுப்பாடுகள் குறைந்து (நன்றி தடுப்பூசி) இயல்பு வாழ்க்கை எட்டிப்பார்க்கத் தொடங்கியதால் சற்றே நம்பிக்கைக் கொண்டு ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்குப்பின் குடும்பத்துடன் பயணித்தபோதுதான் வெண்முரசு ராலே திரையிடலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தயாரிப்பாளர் டெக்சாஸ்காரர் தான், கண்டிப்பாக இங்கே திரையிடுவார், கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று துண்டு போட்டு வைத்திருந்தேன். மறுநாளே நம் தளத்தில் வெளியான ஆஸ்டின் அறிவிப்பைக் காட்டி அனுமதி வாங்கிவிட்டேன். மகள்களின் பள்ளியின் சில நிபந்தனைகளால் நான் மட்டும் மே 22, 2021 நிகழ்வுக்கு கிளம்பினேன். இசையில் தொலைந்து கொலைக்குத் தலை கொடுத்த முன்னனுபவங்களினால் தனியான பயணங்களில் இளையராஜாவுக்குக் கண்டிப்பானத் தடை. மாற்றாக உங்கள் குறள் உரையுடன...