ஆஸ்டின் சௌந்தர்
சென்ற ஆண்டு பூன் முகாமில் பங்கேற்றதின் பெறுமதிகளில் ஒன்று இணைமனங்கள். இணையம் வழியாகவும் நேரிலும் நண்பர்களுடன் உரையாடுவதும் வாசிப்பை பகிர்ந்துகொள்வதும் புரிதலை பல மடங்கு அதிகரிப்பதை தினமும் அனுபவிக்கிறேன். வாசிப்பென்றால் பேஸ்புக்கில் செய்வது , கவிஞர் என்றால் வைரமுத்து என்ற சுற்றத்துக்கு நடுவே கிடந்து தவித்துக் கொண்டிருந்த எனக்கு உங்கள் வாசகர்களை சந்திக்கும் முதல் வாய்ப்பு 2021 இல் ஆஸ்டின் நகரில் வெண்முரசு ஆவணப்பட திரையிடலில். கோவிட் நோயச்ச காலமாதலால் முகக்கவசம் அணிந்தவர்களிடையே தனியாக பேசிக்கொள்ள இருந்த மனத்தடையால் பெரிதாக எனக்கு யாருடனும் தொடர்பு ஏற்படவில்லை. சில பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தது. எங்களை இணைத்த அடுத்த நிகழ்வு ஜெயமோகனின் 2022 அமெரிக்க வருகை. அங்கு சந்தித்த நண்பர்கள் தொடர்பில் இருந்தாலும் நாங்கள் தன்னளவில் வாசித்துக்கொண்டிருந்தோமே தவிர இணைந்து பெரிதாக எதுவும் செய்யவில்லை. 2023 இல் ஜெயமோகனுடன் ஒருநாள் முழுதும் சான் ஆன்டோனியோ நகரைச் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது , பலவகையில் என்னளவில் ஒரு மிகப்பெரிய...