Posts

Showing posts from August, 2013

பீத்தோவனின் ஆவி - வாசிப்பனுபவம்

Image
2013 இல் ஜெயமோகன் தன் தளத்தில் புதிய எழுத்தாளர்கள் சிலரின் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டார். அதில் வேதா என்பவரின் "பீத்தோவனின் ஆவி" என்ற சிறுகதை மிகவும் கவர்ந்தது. அதுகுறித்து ஜெயமோகனுக்கு எழுதி அவர் தளத்திலும் வெளியான கடிதம். வேதாவின் “ பீத்தோவனின் ஆவி”  படித்தேன். சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின் ஆலாபனை, எனக்கு மதுரை சோமுவின் “என்ன கவி பாடினாலும்”. http://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE சம்பிரதாயங்களை நினையாமல் அனிச்சையாக “ஆஹா” என்பதும் வயலினுக்கு “சபாஷ்” சொல்வதும் மிகவும் இயல்பாக, தன்னைக் கரைத்துக் கொண்ட இரு கலைஞர்களின் வித்தை கேட்பவர்களையும் கரைக்கிறது. வண்ணதாசன் அவர்கள் முகநூலில் பகிர்ந்த அருணா சாய்ராமின் “என்ன கவி பாடினாலும்” தேடும் போது கிடைத்த இப்பாடல் மதுரை சோமுவின் குரல் மற்றும் லால்குடி ஜெயராமனின் வயலின் இரண்டும் கொடுக்கும் துக்கம் தாளமாட்டாதது. இரவு பதினோரு மணிக்கு பைக்கில் வீடு திரும்புகையில் கேட்டுவிட்டு கண்ணீர் மறைத்ததால் வண்...