Posts

Showing posts from April, 2013
 இந்தியின் தேவை - விவாதம். இந்தியின் தேவை என்னும் தலைப்பில் ஜெயமோகனின் தளத்தில் நடந்த சிறு விவாதத்தில் என் தரப்பாக  எழுதிய கடிதம். அவர் தளத்தில் வெளியிட்டு தர்க்கபூர்வமான விளக்கத்தையும் அவர் அளித்திருந்தார். உணர்வுபூர்வமாக யோசிக்க வேண்டியதையும் தர்க்கபூர்வமாக யோசிக்க வேண்டியதையும் குழப்பிக் கொள்ளும் பழக்கம் குறித்து யோசிக்க வைத்த சம்பவம். அன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். “இந்தியின் தேவை”  மற்றும் “ இந்தி,சம்ஸ்கிருதம்,தமி ழ்” வாசித்தேன். இராஜீவ் கூறுவது சரிதான். அவரது வட மாநிலங்கள் அளவுக்குத் தேவை இல்லையெனினும் பெங்களூருவில் வசிக்கும் எனக்கும் கூட இதே எண்ணம் இருக்கிறது. அறிவார்ந்த விவாதத்துக்காக இல்லையெனினும் தொடர்பு கொள்ளவேனும் இந்தி தேவையாகிறது. அந்தத் தொடர்பு கொள்ளும் தேவை இப்போது பெருகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். பல மாநிலத்தவர் உடன் பணிபுரியும் சூழல் இப்போது கட்டயாமாகப் போய்விட்ட நிலையில், வடக்கு – தெற்கு என்றெல்லாம் பேதமில்லாமல் போகச் செய்யும் விஷயமாக இந்தி இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறேன். அதை மாற்றும் திராணி இங்கு இந்தியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இல்லை. ...