Posts

Showing posts from October, 2024

எமர்சன் முகாம் 2024 - அனுபவங்கள்

Image
2023ம் வருடம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தபொழுது ஒருநாள் முழுவதும் சான் ஆன்டோனியோ நகரில் அவருடன் சுற்றும் பெருவாய்ப்பு சௌந்தர் சாரால் கிடைத்தது. "சார், பயங்கரமா இளைச்சுடீங்களே" என்றதற்கு பெரிய சிரிப்புடன் "அப்படியா" என்று பின் அருண்மொழி அக்காவிடம் "பார்த்தியா, டல்லாஸ் மூர்த்தியும் சொல்றாரு" என்று வம்பிழுத்தார்.  "அது டல்லாஸ் இல்ல ஜெயன், டாலஸ்" என்று உங்களிடம் நொடித்துவிட்டு "அது ஒண்ணுமில்ல, எட்டு கிலோ இளைச்ச பெருமை" என்று பதிலுக்கு அக்காவும் கிண்டலடித்தது சுவாரசியம்.  சொல்ல விழைவது, எனக்கு ஜெயமோகனின் குரல் உரை வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் ஒரு கறாரான ஆசிரியரின் தொனியிலேயே இருந்தது. நகைச்சுவை கட்டுரைகளின், விஷ்ணுபுர விருது விழாக்களின் வெடித்துச் சிரிக்கும் முகங்களுக்கிடையில் இருக்கும் அவரை எனக்குக் கிடைத்தது அன்றுதான். நதியோர நடையிலும், படகிலும், உண்ணும் போதும் என எல்லா நேரமும் நீங்களும் அக்காவும் ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டுமிருந்தது ஒரு இனிமையையும் நிறைவையும் அளித்தது. அவரிடம் கேட்கவேண்டும் என வந்த இரு கேள்...