Posts

Showing posts from 2024

எமர்சன் முகாம் 2024 - அனுபவங்கள்

Image
2023ம் வருடம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தபொழுது ஒருநாள் முழுவதும் சான் ஆன்டோனியோ நகரில் அவருடன் சுற்றும் பெருவாய்ப்பு சௌந்தர் சாரால் கிடைத்தது. "சார், பயங்கரமா இளைச்சுடீங்களே" என்றதற்கு பெரிய சிரிப்புடன் "அப்படியா" என்று பின் அருண்மொழி அக்காவிடம் "பார்த்தியா, டல்லாஸ் மூர்த்தியும் சொல்றாரு" என்று வம்பிழுத்தார்.  "அது டல்லாஸ் இல்ல ஜெயன், டாலஸ்" என்று உங்களிடம் நொடித்துவிட்டு "அது ஒண்ணுமில்ல, எட்டு கிலோ இளைச்ச பெருமை" என்று பதிலுக்கு அக்காவும் கிண்டலடித்தது சுவாரசியம்.  சொல்ல விழைவது, எனக்கு ஜெயமோகனின் குரல் உரை வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் ஒரு கறாரான ஆசிரியரின் தொனியிலேயே இருந்தது. நகைச்சுவை கட்டுரைகளின், விஷ்ணுபுர விருது விழாக்களின் வெடித்துச் சிரிக்கும் முகங்களுக்கிடையில் இருக்கும் அவரை எனக்குக் கிடைத்தது அன்றுதான். நதியோர நடையிலும், படகிலும், உண்ணும் போதும் என எல்லா நேரமும் நீங்களும் அக்காவும் ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டுமிருந்தது ஒரு இனிமையையும் நிறைவையும் அளித்தது. அவரிடம் கேட்கவேண்டும் என வந்த இரு கேள்...

சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்

Image
பின்வசந்ததில் பகலொளி சேமிப்பு தொடங்கியபின் மாலை நீள்வதால் நடை சாத்தியப்படுகிறது. ஒலிப்புத்தகங்களையோ யூடுப் காணொளிகளையோ கேட்டுக்கொண்டு செல்வேன். ஆனால், அதில் வாசிப்பவரின் உணர்ச்சி / நாடகத்தன்மை சிலவேளைகளில் எரிச்சலாக இருக்கும். அப்போதுதான் கூகிள் அஸிஸ்டண்ட்டை கண்டைந்தே ன் - AI.   அதற்குத்தான் உணர்ச்சி கிடையாதே என்று முயன்று பார்த்தேன் .   நின்று விளையாடுகிறது.  எனவே வெண்முரசு மீண்டும் முதலிலிருந்து.  மழைப்பாடலில் திருதராஷ்டிரர் இசை கேட்கும் பகுதிகள், அவர் மழையையும் பெரும் பாலைப்புயலையும் எல்லாம் இசையால் காண்கிறார் என்னும் வியப்பில் இருந்தேன்.  நாழிகைகளில் நீளும் பண்ணை இசைக்கும் சூதர்களை எண்ணிக்கொண்டிருக்கையி ல்  செவ்வியல் இசை கேட்பதை மீண்டும் முயன்றால் என்ன என்ற எண்ணம் வந்தது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓரிருமுறை சில பெரும் பாடகர்களை முயன்றிருந்தேன். ஒலித்தரம் அல்லது அவர்களின் முதிய வயது குரல்கள் அத்தனை ஈர்க்கவில்லை. இவ்வேளையில்தான் சஞ்சய் சுப்பிரமணியன் அவர்களின் அமெரிக்கப் பயணம் (தமிழும் நானும்) குறித்த அறிவிப்பை...