மற்றுமோர் இனிய பொழுது
நேற்று புத்தக அலமாரியை சுத்தப்படுத்தியபோது எடுத்தவை இவை. "ஜெயமோகன் எழுதியதை விட உங்க பொண்ணு குள்ளம்" என்று கிண்டலடித்த மனைவிடம் என்ன சொல்வதென்று யோசித்து, அதற்கும் உங்களையே துணை கொண்டு ( நம் அடுத்த கட்ட சாதனைகள் என்பது நமக்கு முன்னே சாதித்தவர்களின் சாதனைகள் மீதேறி செய்வதே ) வெண்முகில் நகரத்தின் மீதேறி கடந்தோம். இந்திர நீலம், காண்டீபம் மூலம் மீண்டும் எங்களை முந்துவீர்களெனினும் இப்போதைக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி.