Posts

Showing posts from 2015

மற்றுமோர் இனிய பொழுது

Image
நேற்று புத்தக அலமாரியை சுத்தப்படுத்தியபோது எடுத்தவை இவை. "ஜெயமோகன் எழுதியதை விட உங்க பொண்ணு குள்ளம்" என்று கிண்டலடித்த மனைவிடம் என்ன சொல்வதென்று யோசித்து, அதற்கும் உங்களையே துணை கொண்டு ( நம் அடுத்த கட்ட சாதனைகள் என்பது நமக்கு முன்னே சாதித்தவர்களின்  சாதனைகள் மீதேறி செய்வதே )  வெண்முகில் நகரத்தின் மீதேறி கடந்தோம்.  இந்திர நீலம், காண்டீபம் மூலம் மீண்டும் எங்களை முந்துவீர்களெனினும் இப்போதைக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி.  

"வெண்முகில் நகரம்" செம்பதிப்பு

Image
ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசை நூல்களை செம்பதிப்பாக கிழக்கு பதிப்பகம் வெளியிடத் தொடங்கி அதில் ஆசிரியரின் கையொப்பமும் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியில் மற்ற எழுத்தாளர்களை சந்திக்கும் & கையெழுத்து பெறும் அனுபவம் வாய்த்திருக்கிறதெனினும் ஜெயமோகனை மட்டும் இன்று வரை சந்தித்ததில்லை.  முதன்முதலாக அவ்வாறு வாங்கிய "பிரயாகை" நாவலை என் மனைவியின் பெயரில் கையெழுத்திட்டு வாங்கியிருந்தேன். இம்முறை "வெண்முகில் நகரம்" செம்பதிப்பில் என் பெயரை நிரப்பிவிட்டு ஆவலாக நூலுக்காக காத்திருந்தேன். இன்று கிடைத்தது. பள்ளிநாட்களில் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி அவர் கையொப்பம் அச்சிட்ட புகைப்படம் கிடைத்தபோது  மிகவும் பரவசமடைந்தேன். அதை எல்லோருக்கும் காண்பித்து பெருமை பீத்தல் வேறு.  சரியோ தவறோ,  அன்றைய முதிராச் சிறுவனின்  அந்தப்  பரவசம் நிஜம். அ தே நிஜமான பரவசம் இன்றும்.  என் பெயரை என் ஆசிரியரின் கையெழுத்தில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். ஆனால், யாருக்கும் இதைக் காட்டக்கூடாதென்றும், இது ஒரு அந்தரங்கமான விஷயம் என்றும் ...

கொற்றவை

Image
ஜெயமோகனின் "கொற்றவை" நாவல் வாசித்து முடித்த இந்த இரவில் எழும் எண்ணங்களை எழுதினால் சீர்படுத்திக்கொள்ளலாலம் என்று எழுத முயற்சித்தேன். ஆனால், முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் தர்க்கம் எல்லாம் வேலை செய்யவில்லை; ஒருவேளை நாவல் கண்ணகியுடனே முடிந்திருந்தால் கூட கொஞ்சம் தப்பித்திருக்கலாம். ஆனால், அதன் இறுதி அத்தியாயம், கலங்கடித்து விட்டது.  என் அப்போதைய நிலையை அப்படியே எழுதி ஜெயமோகனுக்கு அனுப்பினேன். அவர் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் . ============ அன்புள்ள ஜெயமோகன், கொற்றவை முடித்த கையொடு இதை எழுதுகிறேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணற்ற சொற்கள் அலைமோதும் ஒரு மனநிலை. இது மகிழ்ச்சியா துக்கமா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு நிறைவு இருக்கிறது. என் தோள்மீது உறங்கும் என் மகள்களை இன்னும் ஆசையோடு அணைத்துக்கொள்ள விழைகிறேன். அணைப்பில் மகிழும்போதே ஊரிலிருக்கும் என் அம்மாவைப் பற்றிய ஒரு ஏக்கம்… கோர்வையாக எழுத முடியவில்லை. மன்னிக்கவும். நன்றி. ===== ஜெயமோகன் தளத்தில் வாசிக்க :  கொற்றவை-கடிதங்கள்