கொற்றவை
ஜெயமோகனின் "கொற்றவை" நாவல் வாசித்து முடித்த இந்த இரவில் எழும் எண்ணங்களை எழுதினால் சீர்படுத்திக்கொள்ளலாலம் என்று எழுத முயற்சித்தேன். ஆனால், முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் தர்க்கம் எல்லாம் வேலை செய்யவில்லை; ஒருவேளை நாவல் கண்ணகியுடனே முடிந்திருந்தால் கூட கொஞ்சம் தப்பித்திருக்கலாம். ஆனால், அதன் இறுதி அத்தியாயம், கலங்கடித்து விட்டது.
என் அப்போதைய நிலையை அப்படியே எழுதி ஜெயமோகனுக்கு அனுப்பினேன். அவர் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் .
============
அன்புள்ள ஜெயமோகன்,
கொற்றவை முடித்த கையொடு இதை எழுதுகிறேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணற்ற சொற்கள் அலைமோதும் ஒரு மனநிலை. இது மகிழ்ச்சியா துக்கமா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு நிறைவு இருக்கிறது.
என் தோள்மீது உறங்கும் என் மகள்களை இன்னும் ஆசையோடு அணைத்துக்கொள்ள விழைகிறேன்.
அணைப்பில் மகிழும்போதே ஊரிலிருக்கும் என் அம்மாவைப் பற்றிய ஒரு ஏக்கம்… கோர்வையாக எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.
நன்றி.
=====
ஜெயமோகன் தளத்தில் வாசிக்க :

Comments
Post a Comment