"நக்குபு புக்கும்" டாலஸ் பூனைகள்...
கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பூன் முகாமிலிருந்து திரும்பியபின் நண்பர்கள் இணைந்து டாலஸில் இருவாரத்துக்கொருமுறை என சந்தித்து எங்கள் இலக்கிய வாசிப்பை பகிர்ந்துகொள்கிறோம். அதன் முதலாம் ஆண்டு நிறைவை கிட்டத்தட்ட ஒரு விழாவாகவே கொண்டாடினோம். நண்பர்கள் பிரதீப்பும் அன்னபூர்ணாவும் இதுகுறித்து ஜெயமோகனுக்கு எழுதியிருந்தார்கள். வெவ்வேறு விதமான வாசிப்பு முறையும் ரசனையும் கொண்ட நண்பர்களுடன் ஒரு படைப்பு குறித்து விவாதிப்பது என்பது ஒரு பிரதியை முழுமையாக அணுகியறிய பெரியளவில் உதவுகிறது. கொண்டும் கொடுத்தும் என ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் பெருமலர்ச்சியுடன் தான் திரும்புகிறோம். பெரும்பாலும் ஜெயமோகனை மட்டுமே படித்துக்கொண்டிருந்த எனக்கு வேறு சில முன்னோடிகளை வாசிக்கும் வாய்ப்பு இங்குதான் கிடைத்தது. புதுமைப்பித்தன் எல்லாவகைமையிலும் ஒரு முன்னோடி என்று ஜெ சொல்வது தெளிவாகப் புரிந்தது. அவரைத் தொடர்ச்சியாக வாசித்த நாட்களில் அவர் கதை போல் இருக்கும் மற்றொரு நவீன ஆசிரியர் அல்லது ஆக்கம் என்ன என்று யோசிப்பது எங்களுக்குள் சுவாரசியமான போட்டி. வெளியிடங்களில் எங்காவது காத்திருக்கும் போது கிடைக்கும் நேர...