ஜெயமோகனின் "கைதிகள்" மற்றும் "அம்மையப்பம்" சிறுகதைகள் - வாசிப்பனுபவம்
பொதுவாகவே ஜெயமோகனின் தளத்தில் வரும் புனைவுகளை படிக்க மாட்டேன். காரணம், இணையத்தில் படித்து விட்டால் அவை புத்தகமாக வரும் போது வாங்க ஒத்துக் கொள்ளாத ஒரு நடுத்தர வர்க்க மனநிலை தான். ஒரு உண்மையான படைப்பாளிக்கு செய்யும் ஒரு குறைந்த பட்ச மரியாதையை மறுப்பதாக ஒரு எண்ணம். (தவறாகக் கூட இருக்கலாம்.) அறம் கதைகள் வெளிவந்த போதும் இப்படித்தான் செய்தேன். அச்சில் வந்த பின்னரே வாங்கிப் படித்தேன். "சோற்றுக் கணக்கு" குறித்து தங்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தேன். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் இம்முறை நடக்கவில்லை. "கைதிகள்" மற்றும் "அம்மையப்பம்" கதைகளை படித்து விட்டு கிறங்கித் திரிகிறேன். அந்தப் பறவையை எனது மனமாகவே நான் உணர்கிறேன். "இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்? -ன்னு கேட்டான்" என்ற வரியைப் படித்துவிட்டு கண்ணீரோடு வெகு நேரம் அமர்ந்திருந்தேன். எனது தற்போதைய பணிச்சூழல் கூட அந்த ஆசாரியை எனக்குப் பிடிக்கச் செய்திருக்கலாம். படைப்பில் நீங்கள் சொல்ல வந்ததை முழுமையாக கண்டுகொண்டேனா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப நிலையில் உள்ள எனது வாசிப்பின் மூலம், எனக்க...