காந்தி & இளையராஜா
காந்தியின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்த இந்த அற்புதம் இன்று காணக் கிடைத்தது https://www.youtube.com/watch?v=Z86LscyJhNY ஜெயமோகன் தளத்திலுள்ள காந்தி பற்றிய கட்டுரைகளாலும் அவரின் உரைகளாலும் நானடைந்த மக்களுக்கும் காந்திக்குமான உறவைக் குறித்த சித்திரத்தின் ஒரு பகுதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. துவக்கத்தில், தன் வீட்டின்முன் நடந்து வரும் காந்தியைக் கண்ட முதிய பெண்மணி கடவுளைக் கண்டவர்போல் அதிர்ந்து வணங்குகிறார். தெருவில் நிற்கும் முதியவரோ தெய்வ சந்நிதியில்போல் பணிந்து நிற்கிறார். வீட்டினுள்ளிருந்து ஓடிவந்து கைகூப்பும் இளம்தாயின் விழிகளும் நடந்தலையும் அப்பாதங்களையே சேர்கிறது – தாய்மை மட்டுமே கொள்ளக்கூடிய துயரத்துடன். தன்னால் இயன்ற ஒற்றை வளையை அளிக்கும்போதும் அவள் விழிகளில் கரிசனம் ததும்பும் அத்துயரே. துயிலெழுந்து காலைச்சூரியனையே தன் கோலியின் மூலமே காணுகிறான் அச்சிறுவன்; தன் பெருஞ்செல்வமாக அதையே சேர்க்கிறான். இறுதியில் அதையே அளிக்கிறான். காந்தியின் வெற்றி – துவக்கத்தில் தனியாளாகவும் பின் நால்வருடனும் தோன்றும் அவரின் பின் திரளும் மக்கள் கூட்டம், தன்னிடமுள்...